டீ மற்றும் பால் அருந்துபவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முழுவதும் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் பாலில் 38 சதவீதம் தரமற்றவை என வெளியான புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதும் 1,103 பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 6,432 பால் மாதிரிகளை சேகரித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்தியா முழுதும் ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவன் அகர்வால், பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட் மாதிரிகளை சோதனை செய்தபோது அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனங்கள் மூலம் பாலில் வரும் ரசாயன பொருள் உள்ளிட்டவை அதிகம் இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் பாக்கெட் பாலில் கொழுப்புகள், சர்க்கரை உள்ளிட்ட சேர்க்கைக்கான மூலக்கூறுகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் முடிவில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் 38 சதவீத பதப்படுத்தபட்ட பால்கள் தரமற்றது என தெரியவந்துள்ளதாகவும் கூறினார். வரையறைப்பட்ட விதிகளுக்கு ஏற்ப தரமான பாலை தயாரிக்க ஜனவரி 1 ஆம் தேதிவரை பால் நேருவங்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரிக்கு பிறகும் பாலில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

milk packet not good for health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->