பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு! அரசின் உத்தரவு ஸ்டாப்! - நீதிமன்றம் இடைக்கால தடை
Menstrual leave women Government order stops Court issues interim stay
கர்நாடக அரசு வெளியிட்ட, பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கட்டாயம் என்ற அறிவிப்புக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் செவ்வாய் (டிசம்பர் 9) அன்று இடைக்கால தடை விதித்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக பெங்களூரு ஹோட்டல் சங்கம் மற்றும் அவிராட்டா AFL அசோசியேட்ஸ் லிமிடெட் ஆகியவை தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்தன. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜோதி, தற்காலிக தடையுத்தரவு பிறப்பித்தார்.“மாதவிடாய் கால விடுப்பு” குறித்து தொழிலாளர் நலன் சார்ந்த எந்தத் தனிச்சட்டமும் இல்லை.

ஏற்கனவே பல தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, அரசு ஒரே அறிவிப்பின் மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த முடியாது என்ற வாதத்தை மனுதாரர்கள் முன்னிலைப்படுத்தினர்.மேலும், “மாதவிடாய் விடுப்பு கொள்கை – 2025” அமல்படுத்தும்போது, தொழில் நிறுவங்களோ அல்லது தொடர்புடைய தரப்புகளோ உடன் அரசு எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை” என்று மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது.
இவற்றை எல்லாம் பரிசீலித்த நீதிபதி, அரசின் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைத்து, அரசுக்கு எதிர்வாதம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
கர்நாடக அரசின் அறிவிப்பில் என்ன இருந்தது?
அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி:
18 முதல் 52 வயது வரை உள்ள அனைத்து பெண் ஊழியர்களும்,நிரந்தரமாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ, அவுட்சோர்சிங் முறையிலோ பணிபுரிபவர்களாக இருந்தாலும்,மாதத்திற்கு 1 நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு பெற வேண்டும்.ஆண்டு முழுவதும் பெண் ஊழியர்கள் பெறக்கூடிய கூடுதல் விடுப்புகள்: 12 நாட்கள்.இந்த விடுப்புகள் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.சேர்த்து வைத்து பின் எடுக்க அனுமதி இல்லை.மருத்துவ சான்றிதழ் தேவையில்லை.இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதற்குள் தான், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Menstrual leave women Government order stops Court issues interim stay