கம்யூட்டர் வேலை என்று கூறி காமுகனின் அட்டூழியம்.! கொத்து கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்.!  - Seithipunal
Seithipunal


குஜராத்தில் நிலேஷ் குப்தா(வயது 44) என்பவர் ஆர்க்கிடெக்ட். அவர் ஒரு கட்டிட வரைபட அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இருப்பினும், அவருடைய அந்த அலுவலகத்திற்குள் அவர் பலான வேலைகளை செய்து வந்துள்ளார் .

பல இளம் பெண்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து கம்ப்யூட்டரில் வேலை என்று கூறி பணிக்கு அமர்த்தி இருக்கின்றார். ஆனால், அங்கு அந்த பெண்களை ஆன்லைன் செக்ஸ் அரட்டை மற்றும் ஆபாச வீடியோ-காலிங் ஆகிய வேலைகளில் ஈடுபடுத்தி இருக்கின்றார். அத்துடன், அவர் “சதுர்பேட்’ எனும் ஐரோப்பிய வயது வந்த வலைத்தளத்திற்கு ஆபாசமான தரவுகளை வழங்குவதாகவும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை மறைக்க இந்த வலைத்தளம் டோக்கன்கள் மூலமாக செயல்பட்டு வந்துள்ளது. அதன் மூலமாக அவர் பல கோடிகள் சம்பாதித்து இருக்கின்றார். இந்த விஷயம் சில உளவாளிகள் மூலமாக காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. எனவே, கடந்த வாரம் போலிசார் அவரது அலுவலகத்திற்கு வந்து அதிரடி சோதனை நடத்தியதில் உண்மைகள் வெளிவந்தன.

அப்போது அங்கிருந்து இரண்டு செக்ஸ் பொம்மைகள், 11 மடிக்கணினிகள், 2 வெப்கேம்கள், 2 ரவுட்டர்கள், இரண்டு தொலைக்காட்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் குப்தாவின் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Men abusing women in Gujarat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->