மெஹபூபா மகள் அமித் ஷாவுக்கு கடிதம்-விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. மேலும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் துண்டிக்க பட்டிருந்த நிலையில் இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைமைக்கு திரும்புகிறது.

இந்நிலையில் தான் நேற்று மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘நாட்டின் மற்ற பகுதிகளில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனால் காஷ்மீர் மக்கள், கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகள் போன்று அடிப்படையான மனித உரிமைகள் கூட வழங்காத நிலையில் வேதனையில் இருக்கிறோம். 

வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம். எங்களை பார்க்க யாரேனும் வந்தால் அந்த தகவல்கள் கூட எனக்கு அளிக்கப்படுவதில்லை. வீட்டு கதவை தாண்டி என்னை பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிப்பதில்லை.

சமூக வலைத்தளங்களில் கூட உதவிக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. மீறினால் விளைவுகளை சந்திப்போம் என்று எச்சரிக்க படுகிறோம். ஆனாலும் நான் மறுபடியும் பேசுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்:

மேலும் அவர் ‘மீண்டும் வாய்ஸ் மெசேஜ்’ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘மத்திய அரசின் நடவடிக்கைகளால் காஷ்மீருடன் மற்ற பகுதிகளுக்கான தொடர்பு முற்றிலும் முடங்கிபோயுள்ளது. நான் ஒரு கிரிமினல் போன்று நடத்தப்படுகிறேன்.

தொடர்ந்து நான் கண்காணிக்கப்படுகிறேன். மற்ற காஷ்மீரிகளை போலவே, எனது வாழ்க்கையை எண்ணி நான் பயப்படுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அவர் அண்மையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mehbooba's Daughter to Amit Shah


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->