பாலியல் குற்றத்திற்கான  உச்சபட்ச தண்டனை..! ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி திட்டம்..!  - Seithipunal
Seithipunal


நாட்டையே உலுக்கிய ஹைதெராபாத் பாலியல் கொலை வழக்கை தொடர்ந்து, விரைவில் இதற்கு தீர்வு காண தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார்.

Image result for priyanka reddy seithipunal

இதை தொடர்ந்து, அதன் படி அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள, ஆந்திர மாநில கிரிமினல் சட்டம் 2019 என்ற இந்த புதிய சட்டத்தின் படி பாலியல் வழக்குகளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

மேலும், 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கவும், பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் பாலியல் வழக்குகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maximum conviction for sexual offense


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->