தலைவிரி கோலமாக தேர்வு எழுதிய மாணவிகள்., நீட் தேர்வில் மேலும் பல கொடுமைகள் நடந்துள்ளன.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவடைந்தது

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது

தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது..

இதை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு 237 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வந்திருந்த அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

இந்த நிலையில் தேர்வு மையத்திற்குள் மாணவிகள் தலையில் அணிந்து வந்த ரப்பர் பேண்டு மட்டுமின்றி மூக்குத்தியையும் கழட்ட வற்பறுத்தியதால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் காலில் செருப்பு அணியவும் குடிநீர் பாட்டில் எடுத்து செல்லவும் அனுமதிக்கபடவில்லை. இதனால் தலைவிரி கோலமாக தேர்வு எழுதிய மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

many more atrocities in the exam selection


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->