எரிபொருள் தீர்ந்தத்தால் செயல் இழந்த செயற்கை கோள்! - Seithipunal
Seithipunal


ஆறு மாதங்கள் மட்டுமே செயல்பட திட்டம்! எட்டு ஆண்டுகளில் வரை செயல்பாட்டில் இருந்தது! 

இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ.450 கோடி ரூபாய் செலவில் பிஎஸ்எல்வி-25 ராக்கெட் மூலம் மங்கல்யான் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த செயற்கைக்கோள் தற்பொழுது தனது செயல்பாட்டை நிறுத்திவிட்டது. 

இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில் "மங்கள்யான் செயற்கைக்கோளில் தற்போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. அதன் பேட்டரியும் செயல் இழந்து விட்டது. இதன் காரணமாக விண்கலமானது தனது தொடர்பை துண்டித்து விட்டது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்படவில்லை. செவ்வாய் கிரகத்தில் அடிக்கடி நிகழும் கிரகணத்தின் காரணமாக அதன் உயரம் அதிகரிக்கப்பட்டது. 

அந்த விண்கலம் ஒரு மணி நேரம் 40 நிமிடம் கிரகத்தை தாங்கும் வகையில் அதன் பேட்டரி வடிவமைக்கப்பட்டது. ஆனால் செவ்வாய் கிரகத்தில் ஒரு கிரகணம் ஏழரை மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக பேட்டரியின் செயல்பாடு திறன் குறைந்துவிட்டது. மங்கல்யான் செயற்கைகோள் ஆறு மாதங்கள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்தது. 

மங்கள்யான் செயற்கைக்கோளின் மூலம் அறிவியல் பூர்வமான தகவல், தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதால் அது தனது பணியை சிறப்பாக செய்துள்ளது. அந்த விண்கலத்தில் 15 கிலோ கிராம் கொண்ட ஐந்து அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மங்கல்யான் விண்கலம் தற்பொழுது அதன் செயல்பாடு இழந்து பிரிந்து சென்றுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mangalyan Satellite lost due to lack of fuel


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->