செல்பி எடுத்தபோது நேர்ந்த விபரீதம்! பகீர் வீடியோவை வெளியிட்ட காவல்துறைக்கு நடிகர் சித்தார்த் விடுத்த வேண்டுகோள்!! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் செல்ஃபி எடுக்கும் பழக்கம் என்பது மக்களிடையே பெருமளவில் காணப்படுகிறது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்பி எடுப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி அனைவரும் பார்க்கும் இடங்களிலெல்லாம், ஆபத்தான நிலையிலும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான நபர்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் எவ்வளவு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் அதனை மக்கள் பொருட்படுத்துவதில்லை.

 இந்நிலையில் இளைஞன் ஒருவன் கட்டிடத்தின் உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்றபோது கல் தவறி தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோவை மும்பை காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.



 

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் சித்தார்த் இதுபோன்ற வீடியோ பதிவிடுவதற்கு முன்பாக கொஞ்சம் எச்சரிக்கை செய்யுங்கள். சிறப்பான நோக்கம் தான். ஆனால் பொறுப்பற்ற மனிதன் என்று பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த வீடியோவிற்கு கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man falling down from upstairs while taking selfie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->