ஆசையாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! கதறியபடி வெளியான வீடியோ!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா பகுதியை சேர்ந்தவர் முகமது ஷமீர். இவர் கடந்த மாதம் வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் வெளிநாடு செல்ல பணம் வாங்கும்போது  ஏஜெண்ட் பண்ணை வீட்டில் வேலை என்று கூறியுள்ளார். ஆனால் சவூதி அரேபியாவிற்கு சென்றபிறகு முகமதுவை பாலைவனம் ஒன்றில் 300 செம்மறி ஆடுகளை மேய்க்க கூறியுள்ளனர். அப்போது avarஎனக்கு பண்ணை வீட்டில்தான் வேலை என்று சொன்னார்கள், நான் ஆடு மேய்க்க வரவில்லை என கூறியுள்ளார். அப்பொழுது இதனை கேட்டு ஆத்திரமடைந்த உரிமையாளர் அவரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் முகமது, கண்கலங்கிய நிலையில் ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். கடுமையான சித்ரவதைகளைச் சந்தித்து வருகிறேன்.

20 நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்து கொடுமைகளை அனுபவிக்கிறேன்.என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள் .   . தினமும் என்னை மிரட்டுகிறார்கள். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறி வீடியோ ஒன்றை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய தூதரகத்திடம் தெரிவித்து அவரை இந்தியா கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary

man cheated bu agent for going abroad


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal