மாட்டிறைச்சி விற்பனை செய்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்ற வரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த காவல் கண்காணிப்பாளர் மகேஷ் சந்தர ஜெயின் தெரிவிக்கையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தெற்கு தோடா பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் நேற்று ஆட்டிறைச்சி விற்பதாக அனுமதி வாங்கி, மாட்டு இறைச்சி விற்றது போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்தது. அந்த கடையில் இருந்த மாட்டிறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அந்த கடையின் உரிமையாளரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தூர் மற்றும் உஜ்ஜயினியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மாடு படுகொலை தடுப்பு சட்டம் 2004 கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற காவல் கண்காணிப்பாளர் மகேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 12 மாதங்கள் வரை எந்த விசாரணையும் செய்யாமல் அவரை சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrest by police complaint anti nation law


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->