பெண் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்திய பெண்ணிற்கு நேர்ந்த கதி!!  - Seithipunal
Seithipunal


திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை சில நாட்களாக மிகவும் மோசமாக சித்தரித்து முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. 

இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட பாஜக இளைஞரணி  ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற இளம்பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரியங்கா சர்மாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

வழக்கறிஞர் என்.கே.கவுல்ஜாமினில் பிரியங்கா சர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் எழுத்துப்பூர்வமாக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்  என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamdha banarji photo issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->