இந்தியா சீனா உறவில் புதிய குழப்பம்! மாமல்லபுரம் சந்திப்பில் சிக்கல்!  - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் வருகின்ற 11-ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து இரு நாடு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கடந்த வருடம் பிரதமர் மோடி சீனா சென்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், வரலாற்று பின்னணி கொண்ட மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய, சீன எல்லைப் பகுதி அமைந்திருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. ஹிம் விஜய் என்ற பெயரில்  7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையும், பின்னர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையும் இருகட்டங்களாக மலையேற்ற பயிற்சி நடக்க இருக்கிறது. 

இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இதனால், இந்திய பயணத்தை சீன அதிபர் ஸீ ஜின்பிங்கு ஒத்திப்போட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் பயிற்சி என்பது அனைத்து ஏடுகளும் மேற்கொள்வது என்பதால் சந்திப்பில் சிக்கல் இருக்காது எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamallapuram indo china meeting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->