பட்டையைக் கிளப்பும் மகேந்திரசிங் தோனி பிறந்தநாள் விழா..! - Seithipunal
Seithipunal


பட்டையைக் கிளப்பும் மகேந்திரசிங் தோனி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

1981 ஆம் ஆண்டு ஜீலை 7 ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தவர் தோனி. 2004 ஆம் ஆண்டு வங்காளாதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிரங்கினார்  தோனி. அதில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து,  2007 ஆம் ஆண்டு  20 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெல்லவும் காரணமாக இருந்துள்ளார். இதன் மூலம் பிரபலமும் ஆனார். தல, கேப்டன் கூல் என்றெல்லாம் பட்டப்பெயர்களில் ரசிகர்கள் இவரை அழைத்து வருகின்றனர். 

தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இவர் தலைமையிலான  இந்திய அணி  பல்வேறு சாதனைகளைப் படைத்தது.  இவர் களத்தில் நின்று விளாசும் ராக்கெட் சாட் மிகவும் ரசிகர்களை ஈர்த்தது. அத்துடன் சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்கினார்.  1983 க்குப் பிறகு பல வருடங்களாக உலக கோப்பையை வெல்வது  என்ற  இந்திய அணியின் லட்சியக் கனவை நிறைவேற்றும் குறிக்கோளுடன் 2011 இல் களமிரங்கிய இந்திய அணியை வெற்றி பெற வைத்து, அதை  இந்திய அணியின் மூத்த அனுபவம் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் அவர்களுக்கு காணிக்கையாக்கினார். அப்ப்போது சச்சின்  ‘நான்  பார்த்த கேப்டன்களில்  டோனி  தலைசிறந்தவர்’ எனப் புகழாரம் சூட்டினார். 

சமீபத்தில் இவரை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி  - தி அண்டோல்ட் ஸ்டோரி’ என்ற  திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ்’  அணிக்காக விளையாடிய தோனி, தமிழக ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரும் செல்வாக்கைப் பெற்றார். அத்தகைய ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரரின் பிறந்தநாளை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருவது தற்போது வைரலாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahendra Singh Dhoni Birthday Celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->