ஆளுநர் எடுத்த அதிரடி நடவடிக்கையால்? மகாராஷ்டிராவில் இனி யாருமே ஆட்சியமைக்க முடியாது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் நிபந்தனைகளால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனாவின்  நிபந்தனைகளை ஏற்க பாஜக சம்மதிக்காததால் அக்கட்சியுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டது. இதனால் அங்கு பாஜக ஆட்சியமைக்க முடியாமல் போனது.

இதையடுத்து, 56 தொகுதிகளில் வெற்றி பெற்று மகாராஷ்டிராவில் இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார், ஆனால் சிவசேனாவால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் அளிக்க இயலவில்லை. 

இதைத்தொடர்ந்து, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர், இன்றிரவு 8.30 மணிக்குள் ஆட்சியமைக்க ஆதரவு கடிதங்களை அளிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தநிலையில், மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்து, யாரும் ஆட்சியமைக்க உரிமை கோரததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra governor request to central government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->