அரசு ஊழியர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் சம்பளத்தில் பாதி கட்... நிதி நெருக்கடியால் அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் விளங்கி வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றாலும், நாளுக்கு நாள் பெரும் சவால் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும், அரசுக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இந்த நிதி நெருக்கடியை சரி செய்ய அரசு ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் விடுத்துள்ள அறிக்கையில், 

கரோனாவை எதிர்த்து போராட முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என்று அனைவரின் சம்பளத்தில் 60 விழுக்காடு பிடித்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனைப்போல, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அரசு பணியாளர்களின் சம்பளத்தில் 50 விழுக்காடும், மூன்றாம் நிலை அரசு பணியாளர்களின் சம்பளத்தில் 25 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படவுள்ளது. பிற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் ஏதும் இல்லை. 

முதல்வருடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், அரசின் நிதி ஆதாரங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra state govt employee salary deducted partially due to economies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->