முதல்வரின் காரோனா தடுப்பு நிதிக்கு, டிக் டாக் நிறுவனம் ரூ.5 கோடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமனது தினமும் அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தினமும் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றது. இந்திய அளவில் மொத்தமாக 33,050 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,074 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 8,325 பேர் சிகிச்சை பெற்று பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் முதல் மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கரோனாவால் 9,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், டிக் டாக் நிறுவனமான சீனாவின் பைட்டுடான்ஸ் நிறுவனம், மகாராஷ்டிர மாநில அரசிற்கு கரோனா தடுப்பு நிதிக்காக ரூ.5 கோடி வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து இந்திய டிக் டாக் தலைவர் தெரிவிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்களின் பணியாளர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அம்மாநிலத்தின் சமூக பொறுப்பின் காரணமாக நிவாரண தொகை மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினருக்கு ஒரு இலட்சம் முகக்கவசம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra state corona welfare fund 5 crore announce by tic tok


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->