காய்கறிகளை ஏற்றிவந்த டெம்போ, விபத்திற்குள்ளான சோகம்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த காய்கறிகள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அலிபட்டா பகுதியில் காய்கறிகளை ஏற்றுக்கொள் லாரி, கலியாண் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த டெம்போ லாரி டொங்கடமாலா நெடுஞ்சாலை அருகே வேகமாக வந்த நேரத்தில், சாலையோர இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. 

இந்த விபத்தில், டெம்போ லாரி அப்பளம் போல நொறுங்கிய நிலையில், டெம்போவிற்கு பின்னால் வந்த காரும் டெம்போவின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் டெம்போவில் இருந்த ஓட்டுநர் உட்பட 4 பேர் வாகனத்தின் இடிபாடிற்குள் சிக்கி உயிருக்கு போராடினர். 

டெம்போவின் மீது மோதிய காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பவே, லாரியில் இருந்தவர்களளை காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், படுகாயமடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பலியான நபர்கள் அங்குள்ள அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பார்னெர் தாலுகா பகுதியை சார்ந்த ஆகாஷ் ரொக்டே (வயது 24), சுரேஷ் கரந்திகர் (வயது 42), சித்தார்த் (வயது 23), சுனில் விலாஸ் (வயது 21) என்பதும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra road accident police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->