கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளான விவகாரம்.. காத்திருக்குமா அதிஷ்டம்?.. உறவினர்கள் கண்ணீர்..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டம் மகாட் என்ற பகுதியில் 5 மாடி கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 47 குடியிருப்புகளை கொண்டிருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 200-க்கும் அதிகமானோர் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில், வீட்டிற்குள் இருந்த மக்கள் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. 

ஆனால், கட்டிடத்தில் மொத்தம் எத்தனை பேர் வசித்து வந்தனர் என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை. கட்டிடம் இடிந்து விழும் சிலமணிநேரத்திற்கு முன் தான் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது வரை 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 1 நபர் உயிரிழந்துள்ளார்.

மீதமுள்ளவர்களை மீட்க்கும் பணியானது விரைந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்கள் பத்திரமாக வர வேண்டும் என்று மக்கள் பிரார்த்திக்க துவங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Raigud Building collapse accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->