#Breaking: மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் பதவி ராஜினாமா.. ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் கிடுக்குபிடி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பித்தார். 

மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 15 நாட்களுக்குள் முதற்கட்ட விசாரணையை தொடங்குமாறு டாக்டர் ஜெய்ஷ்ரி பாட்டீலின் மனுவில் சி.பி.ஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங், உள்துறை அமைச்சர் தங்களிடம் ரூ.100 கோடி கேட்டு தொந்தரவு செய்வதாகவும், தங்களை இலஞ்சம் வாங்கி பணம் தரக்கூறி வற்புறுத்துவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக டாக்டர் ஜெய்ஷ்ரி பாட்டீலின் மனுவை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம், உள்துறை அமைச்சரான அனில் தேஷ்முக் ஊழல் மற்றும் பிற குற்றசாட்டு தொடர்பான விசாரணையை ஊக்குவிக்க உத்தரவிட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது கட்சித் தலைவர்களைச் சந்தித்து, அவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் தனது ராஜினாமாவை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Home Minister Anil Deshmukh Resign his Job due to Corruption Complaint


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->