5 மாத குழந்தையின் உயிரை காப்பாற்ற, 2 இலட்சம் பேர் சேர்த்து ரூ.16 கோடி நிதிஉதவி.!! - Seithipunal
Seithipunal


மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்து மாத குழந்தையின் சிகிச்சைக்கு ரூபாய்16 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். 

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தை சார்ந்தவர் ராஜிடிபிசின்க் ரத்தோட் (Rajdipsinh Rathod). இவரின் 5 மாத குழந்தைக்கு ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (Spinal Muscular Atrophy) என்ற மரபு நோயானது இருந்துள்ளது. இந்த நோய் நரம்பு மண்டலத்தை முற்றிலும் தாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், குழந்தை இரண்டு வயதுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நோய் சிகிச்சைக்காக ஜோல்ஜென்ஸ்மா என்ற மருந்து இருப்பதாகவும், இதனை செலுத்தினால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் ஜோல்ஜென்ஸ்மா (Zolgensma) மருந்தின் விலை ரூபாய் 16 கோடி ஆகும். இதனையடுத்து, குழந்தைக்காக நிதி உதவி கோரி கோரிக்கை வைத்த நிலையில், சுமார் இரண்டு லட்சம் பேர் இதற்காக நிதி உதவி அளித்தனர். 

இதன் பின்னர் தேவையான ரூ.16 கோடி பணம் சேர்ந்த நிலையில், குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. தற்போது, குழந்தை உடல்நலம் சீருடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Gujarat Ahmadabad Baby Life Helped by 2 Lakh Peoples 8 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->