மகாராஷ்டிரா அரசியலில் அதிர்ச்சி: அமைச்சர் பதவி ராஜினாமா... உத்தவ் தாக்கரே கவலை.! - Seithipunal
Seithipunal


சிவசேனா கட்சியின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரா மாநில வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநில வனத்துறை அமைச்சர் மற்றும் சிவசேனா கட்சியின் தலைவராக இருப்பவர் சஞ்சய் ரத்தோட். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மல் (Yavatmal) தொகுதியின் மூலக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புனேவில் நடைபெற்ற நாடோடி பஞ்சாரா இனத்தை சார்ந்த 23 வயது பெண்ணின் மரணத்திற்கும், அமைச்சர் சஞ்சய் ரத்தோடுக்கும் தொடர்பு இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சட்டி வந்தது. 

இந்நிலையில், இன்று தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் நேரில் சென்று கொண்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத உத்தவ் தாக்கரே, ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பதாகவும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Forest Dept Minister Sanjay Rathod Resignation his Minister Post due to Pune girl Murder Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->