அழைப்பு விடுத்த மோடி... வீடியோ வெளியிட்டு கலாய்த்து தள்ளிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை தோல்வியுற செய்ய நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் உணர்வை வெளிப்படுத்தும் பொருட்டு நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மக்கள் தங்களின் இல்லத்தில் இருக்கும் மின்விளக்கை அணைத்து அகல் விளக்குகளில் ஒளி ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த விஷயம் ஒருபுறம் வரவேற்பும், மற்றொருபுறம் விமர்சனம் பெற்றுள்ளது. 

இந்த விஷயத்திற்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் வருவாய்த்துறை மந்திரி பாலசாகேப் தோராட் பேசிய சமயத்தில், கரோனா வைரஸை தடுக்கும் நோக்குடன் பிரதமர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதனைவிட்டுவிட்டு விளக்கை ஏற்றச்சொல்வது எப்படிப்பட்டது? என்று கூறினார். 

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த வீட்டுவசதித்துறை மந்திரியான ஜிதேந்திர அவாத் வெளியிட்ட வீடியோ காட்சிகளில், கரோனா தடுப்பு நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அகல்விளக்கை ஏற்ற அழைப்பு விடுத்துள்ளார். இது சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள் தனமாகவும் இருக்கிறது. இவர் கூறுவது போல விளக்குகளை யாரும் ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra congress party speech about modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->