வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அடுத்த அதிர்ச்சியில் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மிராரோடு பகுதியை சார்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அனுபமா பதாக் (வயது 40). பீகார் மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட அனுபமா, மும்பைக்கு வந்த பின்னர் போஜ்பூரி படங்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார். 

இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அனுபமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அனுபமா தற்கொலைக்கு முன்னதாக முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்த வீடியோ காட்சிகளை கைப்பற்றியுள்ளார். இந்த வீடியோவில் உள்ள தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோவில், "நான் யாரை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. எனது நண்பர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். நான் இப்போது ஊரடங்கால் நம்பிக்கை துரோகம் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கியுள்ளேன். மன உளைச்சலால் நான் இம்முடிவை எடுக்கிறேன் " என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra actress suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->