மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது?! அடிக்கல் நாட்டிய செங்கல்லும், 12 கோடி செலவும்!  - Seithipunal
Seithipunal


மதுரையில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநிலங்கவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது ஏன்? என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணிக்காக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஜாப்பான் நிறுவனத்துடன் ஏற்பட்ட தாமதத்தால் காலதாமதமாகியுள்ளது என தெரிவித்தார். பிரச்னைகள் விரைவில் மத்திய அரசால் தீர்க்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி செங்கல் எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIIMS update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->