போலி முகநூல் ஐடி உரிமையாளரை பாசமாக கவனித்து, பக்குவமாக போஸ்ட் போட்ட காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியை சார்ந்தவர் ரவி பூஜார் (வயது 31). இவருக்கு கடந்த 2012 ஆம் வருடத்தில் முகநூல் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இவர் கடந்த 10 வருடமாக தனது கல்லூரி படிப்பில் தோல்வியுற்று, தேர்ச்சிக்கான தேர்வை எழுதிக்கொண்டே வருபவர் ஆவார். 

இவருக்கு முகநூல் அறிமுகமாக நிலையில், முகநூலில் பாக்கிஸ்தான் நடிகையான மீரா பாஷாவின் புகைப்படத்துடன், நிஷா ஜிண்டால் என்ற பெயரில் கணக்கை துவங்கியுள்ளார். இந்த பக்கத்தின் மூலமாக சுமார் 10 ஆயிரம் பின்தொடர்பாளர்களை இவர் பெற்றுள்ளார். 

இந்த கணக்கின் மூலமாக பல சர்ச்சை தகவலை காவல் துறையினர் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ரவி புஜாரை கைது செய்துள்ளனர். இவனிடம் மேற்கொண்ட விசாரணையில், முகநூலின் மூலமாக போலியான மற்றும் சர்ச்சை தகவல் பரப்பியது அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து இவனை கைது செய்த காவல் துறையினர் அலைபேசி மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்த நிலையில், இவனது புகைப்படத்தை போலியான கணக்கில் " நான் தான் நிஷா ஜிண்டால், நான் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளேன் " என்று குறிப்புடன் பதிவு செய்துள்ளனர்.. இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhyapradesh youngster fake ID arrested by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->