இன்டர்நெட் ரீச்சார்ஜ் செய்யாததால் 20 வயது இளைஞரின் விபரீத முடிவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் 20 வயதுடைய இளைஞர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அலைபேசி உள்ள நிலையில், எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக இருந்து வந்துள்ளார். 

இதனால் பலமுறை பெற்றோர்கள் எச்சரித்தும் கேட்காத நிலையில், அலைபேசியில் இன்டர்நெட் பேக் காலியாகியுள்ளது. இதனால் பெற்றோரிடம் இளைஞர் நெட் பேக் ரீசார்ஜ் செய்ய பணம் கேட்டுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர்கள் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர். 

தந்தையிடமும், தாயிடமும் பலமுறை இன்டர்நெட் ரீசார்ஜ் செய்ய பணம் கேட்ட நிலையில், தொடர்ந்து பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால் இளைஞர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை தாளிட்டுள்ளார். 

நீண்ட நேரம் மகன் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள், கதவை உடைத்து உள்ளே செல்கையில் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh youngster commit suicide, when his parents couldn't recharge internet pack.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->