இரண்டு சீட்டாக்களை வனப்பகுதிக்குள் விட்ட பூங்கா நிர்வாகம்.!   - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கடந்த 1952-ம் ஆண்டு இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவித்தது. ஆனால், அவற்றை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான அனைத்து தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தின்படி, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகள் அடங்கிய 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்கியது. அதன் பிறகு இந்த எட்டு சீட்டா குழு, கடந்த செப்டம்பர் 17-ந்தேதி காலை விமானத்தின் மூலம் நமீபியாவில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்டன. அதன்பின்பு ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்த எட்டு சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி குணோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். இருந்தாலும், அந்த சிறுத்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதல் வளையத்திற்குள்ளேயே உலாவி வந்தன.

இந்நிலையில், இரண்டு ஆண் சீட்டாக்கள் தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதால், குணோ தேசிய பூங்காவில் உள்ள வாழ்விட பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, இரண்டு சிறுத்தை புலிகள் தனிமைப்படுத்துதலுக்கு பின்பு குணோ தேசிய பூங்காவில் உள்ள வாழ்விட பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஆறு சீட்டாக்களும் விரைவில் வெளிவிடப்படும்.

இந்த அனைத்தும் சீட்டாக்களும் நல்ல ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்புடன் மற்றும் வாழ்விடத்திற்கு ஏற்ற சூழலுடன் நன்றாக உள்ளது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த இரண்டு சீட்டாக்களையும், மத்திய சுற்று சூழல், வன மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம் ஆனது, மத்திய விலங்குகள் நல அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற்ற பின்னர் வனத்தில் விடுவிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh guno park after isolation two cheetas released in forest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->