நான் தான் புதிய மாவட்ட ஆட்சியர் - போலீசாரை அலறவிட்ட டிப்டாப் இளைஞன்! - Seithipunal
Seithipunal


நான் தான் புதிய மாவட்ட ஆட்சியர் என்று, பதவி ஏற்க வந்த இளைஞரால், மத்திய பிரதேச மாநில போலீசார் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டிப்டாப்பாக பார்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் போலவே, ஒரு கையில் கைப்பையுடன் இரு இளைஞர் வந்தார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசாரிடம், "குடியரசு தலைவரால் புதிதாக மாவட்ட நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் நான் தான். என்னுடைய அலுவலகம் எங்கே இருக்கிறது? அதனை காட்டுங்கள்" என்று தெரிவித்தார்.

முதலில் இதனை நம்பிய போலீசார், பின்னர் அந்த நபர் மீது சந்தேகப்பட்டு, விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில், அவர் ஆனந்த் நகரை சேர்ந்த சத்யா என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இருந்தபோதிலும் அந்த வாலிபர் போலீசாருக்கு போக்கு காட்டி, லாபகமாக தப்பித்து சென்றார். இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நான் தான் மாவட்ட ஆட்சியர் என்று கூறிய அந்த வாலிபர் சத்யாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Fake Collector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->