நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்... இந்தியாவில் முதல் பலி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது கடுமையாக அதிகரித்து வருகிறது. தினமும் கருணாவிற்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. 

இன்றைய காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 473 பேர் பூரண நலனுடன் இலலத்திற்கு திரும்பியுள்ளதாகவும், 166 பேர் பலியாகியுள்ளதாகவும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 540 ஆக உயர்ந்துள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், கரோனாவால் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் எம்.ஜி.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இவருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இந்த மருத்துவரே இந்திய அளவில், சிகிச்சை அளித்த மருத்துவர் உயிரிழப்பது முதல் பலி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh doctor corona virus positive died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->