மனைவி, குழந்தைகள், மக்களை எண்ணி தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட மருத்துவர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இருக்கும் ஜெ.பி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சச்சின் நாயக். இவருக்கு மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தை உள்ளினர். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கரோனா வைரஸ் அதிகளவு பரவி வருகிறது.

இதனால் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சச்சின் நாயக், இரவு வேலையில் தனது இல்லத்திற்கு திரும்பாமல், காரினை சாலையோரமாக நிறுத்திவிட்டு இருக்கையினை சாய்த்து அதிலேயே படுத்து உறங்கி வந்துள்ளார்.

மேலும், காரிலேயே தண்ணீர், சோப்பு, பேஸ்ட் மற்றும் பிரஷ், மடிக்கணினி போன்றவற்றை வைத்துள்ளார். சமயம் கிடைக்கும் வேளைகளில் சாலையில் நடந்து கொண்டும், தனது மனைவி மற்றும் மகளிடம் அலைபேசியில் பேசியிருந்து வந்துள்ளார். 

இவர் இவ்வாறே ஒருவார காலத்தினை கழித்த நிலையில், தன் மூலமாக கரோனா வைரஸ் தனது மனைவி மற்றும் மகளுக்கு அல்லது பிற நபர்களுக்கு பரவக்கூடாது என்றும், இதனாலேயே தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அம்மாநில முதல்வர் செவ்வாய்கிழமைக்கு பின்னர் மருத்துவர்கள் விடுதியில் தங்க ஏற்பாடு செய்துள்ள நிலையில், இவரின் செயலை அறிந்து அம்மாநில முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya pradesh corona virus doctor self quarantine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->