எதார்த்தமாக வாங்கிய லாட்டரி! அயல்நாட்டில் இந்தியனுக்கு பலகோடி கணக்கில் அதிர்ஷ்டம்! - Seithipunal
Seithipunal



ஷார்ஜாவில் கேரளாவைச் சேர்ந்த முகம்மது அஸ்லாம் என்பவர் 12-ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியானோர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், ஷார்ஜாவில் பணிபுரிந்த முகம்மது அஸ்லாம் என்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் லாட்டரியில் விழுந்துள்ளது. குறிப்பாக துபாய் லாட்டரி குலுக்கலில் கேரளத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் லாட்டரியில் பரிசு வென்றுள்ளனர்.

 முகம்மது அஸ்லாம் வென்ற பரிசு, இந்திய மதிப்பில் 15 கோடிக்கு அதிகமாகும். மேலும் இதுபோன்ற லாட்டரி டிக்கெட்டிற்கு அந்த நாட்டில் வரி செலுத்த தேவையில்லை. இந்த நிலையில்,தற்போது அஸ்லாம் அந்த லாட்டரி  டிக்கெட்டை லாட்டரி டிக்கெட்டை சொந்த ஊரில் தந்தையிடம் கொடுத்து வைத்துள்ளார். 

இதுகுறித்து முகம்மது அஸ்லாம் கூறுகையில் நான் அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று, அந்த டிக்கெட்டை எனது பெற்றோர்களிடம் கொடுத்து பிராத்தனை செய்யக்கூறினேன். அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lucky indian in dubai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->