கதறும் எதிர் கட்சிகள் - வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சிதறிய தகவல்..? மெஷின் செஞ்சவரே வந்தாலும் இம்மி நகராது..! - Seithipunal
Seithipunal


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களும், அரசியல்வாதிகளும் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கு பதிலடி தரும் வகையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது. 2006-ம் ஆண்டு வரை எம்1 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

அதில் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களும் புகுத்தப் பட்டுள்ளன. எனவே அதை யாராலும் ‘ஹேக்’ செய்ய முடியாது.

2006-க்கு பின் 2012 வரை உற்பத்தி செய்யப்பட்ட எம்2 வகை இயந்திரத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் வசம் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கணினி மூலம் கட்டுப்படுத்த முடியாது.

இணையதளம் அல்லது பிற தொலை தொடர்புகள் மூலமாகவும் அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தை தயாரிக்கும் உற்பத்தி யாளர்களால் கூட, அதில் முறைகேடுகள் செய்ய முடியாது.

வாக்குப்பதிவு இயந்திரத்தை வெளிநபர்கள் யாராவது திறக்க முயற்சித்தால், சேதப்படுத்தப் பட்டதை காட்டிக் கொடுத்துவிடும். அதன் மென்பொருளிலோ அல்லது தொழில்நுட்பத்திலோ கூட எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினியுடன் இணைக்க முடியும்.

அதை வைத்து இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். இதன் காரணமாகவே வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலின்போது பயன்படுத்த தயங்குகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lok shaba election result 2019 india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->