அனுமதியை மீறிய அமைச்சர் மகன்.. வெளுத்து வாங்கிய போலிஸ்.. ட்ரான்ஸ்பர் செய்த அரசு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. பிரகாஷின் நண்பர்கள் ஊரடங்கை மீறி சூரத் நகரில் இரவு நேரத்தில் சுற்றித்திரிந்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் இவர்களை பெண் காவல் அதிகாரியான சுனிதா தடுத்து நிறுத்திய நிலையில், இந்த விஷயத்தை அறிந்த பிரகாஷ், பெண் காவல் அதிகாரியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இந்த சமயத்தில், பெண் அதிகாரி " ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேவர அனுமதி வழங்கியது யார்?.. யாராக இருந்தாலும் எனது பணியை நான் கட்டாயம் செய்வேன் " என்று கூறி கடுமையாக சண்டையிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் மகன் ஒருபுறம் பேச்சை ஆரம்பிக்கவே, காவல் அதிகாரிகள் அமைச்சரின் மகனை கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலானது. 

இதனையடுத்து அமைச்சரின் மகன் பிரகாஷ் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். காவல் அதிகாரி சுனிதாவிற்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் காவல் தலைமைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த பிரச்சனைக்கு பின்னர் அவர் சொந்த விடுப்பில் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lockdown offence Gujarat minister son arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->