காவேரி தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் தெரிவித்த பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


காவேரி ஆற்றில் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை ஜுன் மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவேரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில் 

இரு மாநில தண்ணீர் பிரச்னையை சுமுகமாக தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஒழுங்காற்றுக் குழு கூட்டம், குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுயிட்ட படி ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை திறக்காத நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று கூடுகிறது

இந்தநிலையில், இன்று கூடுகின்ற  காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டதை பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டால் தண்ணீர் திறப்பது குறித்து பார்க்கலாம்  என பதிலளித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumarasamy speak about kaveri water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->