கோழிக்கோடு விமான விபத்து! தப்பித்த நபரின் அதிர்ச்சி அனுபவம்!! - Seithipunal
Seithipunal


191 பேருடன் துபாயில் இருந்து கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்த விமானம் நேற்று விபத்திற்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து விலகி இந்த விமானம் ஒரு பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்து. இந்த விபத்தில் விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்களில் தப்பித்த ஒருவர் இந்த விபத்தின் கோர அனுபவத்தை தற்போது தெரிவித்துள்ளார். கோழிக்காடு எலாத்தூரைச் சேர்ந்த ஜூனாயத் (25) விமான விபத்து நடக்கும் போது முன்பு மிகப்பெரும் சத்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், "முதலில் விமானம் சாதாரணமாகத்தான் தரையிறங்க போவதாக எண்ணி இருந்தோம். ஆனால், விமானம் தரையிறங்க முயன்று, பின் இறங்காமல் மீண்டும் புறப்பட்டது. 

தரையிறங்க இரண்டாவது முயற்சியின் போது இந்த விமான விபத்து நடந்தது. தரை இறங்கும் போது விமானத்தின் வேகம் அதிகமாக இருந்ததாய் உணரும் முன்னே விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி இரண்டாக உடைந்தது விபத்தாகிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

விமானத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், தான் பின் இருக்கையில், தனது இருக்கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தால் காயமின்றி தப்பித்தாகவும் ஜூனாயத் கூறியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kozhikode flight accident details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->