கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவரால், சிக்கலில் சிக்கிய மீட்பு பணியினர்! - Seithipunal
Seithipunal


இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று , துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உட்பட 185 இந்தியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 3 பேர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விமானத்தில் பயணிகளைத் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் பயணித்தனர். 

துபாயில் இருந்து நேற்று பிற்பகல் புறப்பட்ட அந்த விமானம், இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தபோது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையை  தாண்டி சென்று விமானம் அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது. 

பள்ளத்தில் விழுந்த விமானம் பயங்கர சத்தத்துடன் இரண்டாக உடைந்தது. விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்தவர்களை மீட்க தீயணைப்பு படை வீரர்கள், மீட்புக்குழுவினர் உடனே ஆம்புலன்ஸ் உடன் விரைந்து சென்றனர். அந்த கோர விபத்தில் விமானிகளின் ஒருவரும் மேலும் 19 பயணிகள் பலியானார்கள்.

இந்த நிலையில், இந்த விமான விபத்தில் பலியான நபரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பயணித்தவர்கள் மற்றும் 
மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள கேரளா சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kozhikode flight accident corano issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->