முகநூல் நண்பனுடன் இன்ப சுற்றுலா.. ரூ.1 கோடி பரிசு கிடைத்த இன்ப அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


முகநூல் நண்பரின் வீட்டிற்கு சென்ற வாலிபருக்கு, ரூ.1 கோடி லாட்டரி பணம் பரிசுத்தொகையாக கிடைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள புத்தளத்தானி அருகேயுள்ள பரவனூர் கிராமத்தை சார்ந்தவர் மணிகண்டன். இவர் லாட்டரி ஏஜென்சி நடத்தி வரும் நிலையில், இவரது கடையில் பிரபாகரன் பணியாற்றி வந்துள்ளார். 

பிரபாகரனும் - கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தை சார்ந்த சோகன் ஹல்ராம் என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் நண்பர்களாக பணியாற்றி வந்த நிலையில், நட்பு ரீதியான பழக்கத்தில் பிரபாகரன் சோகனை ஊருக்கு அழைத்துள்ளார். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக குடும்பத்தினருடன் கேரளாவிற்கு வந்த சோகன், பிரபாகரனின் இல்லத்தில் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் தொழில் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்த நிலையில், நண்பனுடன் சென்று விளையாட்டுப்போக்கில் வாங்கியுள்ளார். 

இதன்பின்னர், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்ற சோகனின் குடும்பத்தினர், கர்நாடக செல்ல தயாராகினர். இரயில் மூலம் கர்நாடக செல்ல முடிவு செய்து, இரயில் நிலையத்திற்கு சென்ற நிலையில், சோகன் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், சோகனின் குடும்பத்தினர் பிரபாகரனின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Youngster Lottery Price Rs 1 Crore 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->