விஷமாகிய உணவு..? 26 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, விஷம் கலந்த உணவை உண்டு பள்ளி மாணவர்கள் 7 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 18 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு நேரடியாக சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பள்ளியில் உள்ள உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

இதேபோல் கொல்லம் மாவட்டம், கொட்டாக்கரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் 8 மாணவிகள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் உண்ட உணவில் விஷத்தன்மை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மகளிர் மட்டும் குழந்தைகள் நலத்துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala school student admitted hospital food poison


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->