பள்ளி வகுப்பறைகள் ஆகும் பேருந்துகள் - முதல்கட்டமாக இரு பேருந்து வகுப்பறைகள்.! - Seithipunal
Seithipunal


பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சோதனை முயற்சியை கேரள மாநில அரசு செய்ய உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநில அரசு புதிய சோதனை ஒன்றை செய்ய முன்வந்துள்ளது. அதன்படி கேரளா மாநிலத்தில் உள்ள பழைய தாழ்தள பேருந்துகளை பள்ளி வகுப்பறைகளாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதற்காக முதல்கட்டமாக பழைய பேருந்து ஒன்றை வகுப்பறை போல் மாற்றி அமைத்து பாடங்கள் நடத்தப்படும் என்று கேரள மாநில அமைச்சர் அந்தோணி ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், மலப்புரம் பகுதியில் இரண்டு பேருந்து வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற இடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala old bus class room


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->