தாயகம் திரும்ப இருந்த மருத்துவ மாணவிக்கு, நொடிப்பொழுதில் அரங்கேறிய சோகம்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சார்ந்த ஜோஸ் - ஸ்ரேலி தம்பதியின் 28 வயது உமக்கு லீஜா ஜோஸ். இவர் கடந்த நான்கு வருடங்களாக தென்கொரிய நாட்டில் இருந்து ஆராய்ச்சி பட்டம் பயின்று வருகிறார். 

இந்நிலையில், பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளாவிற்கு திரும்பியிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக மீண்டும் தென்கொரியாவிற்கு செல்ல இயலவில்லை. இதனையடுத்து கடந்த 6 ஆம் தேதியன்று தென்கொரியாவிற்கு சென்றுள்ளார். 

தென்கொரியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், காதல் வலி மற்றும் முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவிலை என்று தெரியவருகிறது. கொரோனா தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்ததன் காரணமாக, மருத்துவமனைக்கு மீண்டும் சென்று கொண்டு இருந்தார்.

உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து சென்றதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து, வியாழக்கிழமை மாலையில் விமான நிலாயத்திற்கு சென்றுள்ளார். ஆனால், விமான நிலையத்திலேயே சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.

இவரை மீட்ட அதிகாரிகள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லீஜா மரண தகவல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, உடலை தாயகம் கொண்டு வரும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Medical Student Died In North Korea Airport


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->