அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த ஆட்டோவை நிறுத்திய காவல்துறை.. கண்டனத்திற்கு உள்ளான விவகாரம்.. வீடியோ..!! - Seithipunal
Seithipunal


காரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. கரோனா வைரஸ் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,380 அதிகரித்துள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 414 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   1489 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 

ஊரடங்கு உத்தரவு அமலாகியதன் காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற பணிகளை மேற்கொள்ள வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள புனலூரில் 65 வயதுடைய நபர் தனது மகனின் பராமரிப்பில் வசித்து வருகிறார். இவருக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இவரை மகன் ஆட்டோவின் உதவியுடன் மருத்துவமனைக்கு அளித்து செல்ல முற்பட்டுள்ளார். 

மருத்துவமனைக்கு 1 கிமீ தூரத்திற்கு முன்னதாக ஆட்டோவை மடக்கிய காவல் துறையினர், ஊரடங்கு காலத்தில் ஆட்டோவை இயக்கியது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளான மகன், தனது தந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala man carries 65 age old father to hospital when police stops auto before 1 km


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->