3 மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 11ம் தேதி வரை 'ரெட்அலர்ட்'.. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் வரும் 11ம் தேதி வரை தீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள.து அதில். நிலச்சரிவில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் காவல்துறையினர், தீயணைப்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் கொண்ட பகுதியாகும். நிலச்சரிவில் 3 மூன்று குடும்பங்கள் சிக்கியுள்ளதாக இடுக்கி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala landslide 5 people death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->