#JustIN: 12 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலி... அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விரையும் மத்திய குழு.!! - Seithipunal
Seithipunal


12 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் நிறைவடைந்து, மூன்றாவது அலை எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனை உறுதி செய்யும் பொருட்டு, கேரளாவில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. 

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சார்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுவன் கடந்த 3 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிபா உறுதியாகியுள்ளது.

மேலும், கேரளாவில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மத்திய அரசின் தேசிய நோய் கட்டுப்பாட்டு குழுவின் சிறப்பு குழு கேரளாவுக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கோழிக்கோட்டில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் நிபா வைரஸுக்கான காரணம் குறித்து அறிக்கையளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேரளாவின் சுகாதார துறைக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கையாண்ட கேரள அரசு, தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Kozhikode 12 Aged Child Died Nipah Virus Infection


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->