பாஜக வார்டு கவுன்சிலர் புற்றுநோயால் மரணம்.. குடும்பத்தினர் சோகம்.! - Seithipunal
Seithipunal


பாஜகவை சார்ந்த வார்டு கவுன்சிலர் புற்றுநோயால் இயற்கையை எய்தினார்.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி 62 ஆவது வார்டு பகுதியை சார்ந்தவர் ஆர். மேனன் (வயது 43). இவரது கணவர் கிருஷ்ண குமார். இவர்கள் இருவருக்கும் இந்துலேகா என்ற மகளும், ஆதித்ய வர்மா என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில், கொச்சி 62 ஆவது வார்டு தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர். மேனன், கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருந்ததாக தெரியவருகிறது. புற்றுநோய்க்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். 

புற்றுநோயின் தீவிரம் அதிகரிக்க, பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தாலும், அதன் தாக்கம் குறையவில்லை. இதனால் வாழ்நாட்களின் இறுதி தருணத்தை எண்ணிக்கொண்டு இருந்த ஆர். மேனன், இன்று காலை 06:15 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இவரது மறைவு அவரது குடும்பத்தினரிடையே மட்டுமல்லாது, அவரது ஊர் மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. ஆர். மேனன் எளிமையான குணம் கொண்ட, யாவரிடத்திலும் அன்போடு பழகும் இயல்பை கொண்டவர் என்றும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Kochi 62 Ward Counselor Woman R Menon Died Cancer Today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->