கேரள - கர்நாடக எல்லைகள் மூடல் விவகாரத்தில், மனு தள்ளுபடி.. டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. 

மாநில எல்லைகள் மற்றும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்திற்கும் - கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லைகளை கர்நாடக அரசு மூடியது. 

இதனையடுத்து அத்தியாவசிய போக்குவரத்து வாகனங்கள் கூட அனுமதி செய்யப்படாத நிலையில், கேரள மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உண்ணித்தன் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்குதொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் இரண்டு நாட்டு முதல்வர்கள் மற்றும் முதல்வர்களின் குழு பேச்சுவார்த்தை நடத்தி, இருமாநில எல்லையான பளப்பாடி சாலையை அவசர மருத்துவ தேவைகளுக்கு உபயோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Karnataka border palapadi check post open for medical emergency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->