கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண்.. கைவிரித்த உள்ளூர் மக்கள்.. களத்தில் இறங்கிய காவல் அதிகாரி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் திருவிழாவானது நடைபெற்றது. இந்த திருவிழாவை காணுவதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த நிலையில், திருவிழாவிற்கு வந்திருந்த இளம்பெண்ணொருவர், அப்பகுதியில் இருந்த மதில் இல்லாத கிணற்றுக்குள் விழுந்துள்ளர். 

கிணற்றில் நான்கடி ஆழத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்த நிலையில் பெண் கீழே விழுந்ததில் மூழ்காமலும், காயம் அடையாமலும் இருந்துள்ளார். மேலும், கிணற்று இருட்டில் பெண்மணி தத்தளித்து கொண்டு இருக்கவே, தனது அலைபேசியின் மூலமாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தான் கிணற்றில் தவறி விழுந்துவிட்டேன் என்றும், தன்னை காப்பாற்றுமாறும் கூறி அழுதுள்ளார். 

இதனையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணிற்கு ஆறுதல் கூறி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், 2 மணிநேரம் ஆகியும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. கிணற்றுக்குள் இறங்க பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளார். 

பெண் கிணற்றுக்குள் இருந்து மேலும் அழத்துவங்கவே, சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்த காவல் ஆய்வாளர் ஜலீல் கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளார். பின்னர் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உதவியுடன் இளம்பெண்ணை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விஷயம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala girl slipped well police inspector rescued successfully


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->