மப்டியில் வந்த உயர் அதிகாரி.. பெண் காவல் அதிகாரிக்கு பனிஸ்மெட்ண்ட்..! கேரள காவல்துறையில் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்திலுள்ள கொச்சி சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்துதுறை உதவி கண்காணிப்பாளராக ஐஸ்வர்யா டோங்க்ரே என்பவர், கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்ற ஐஸ்வர்யா, அங்கு ஆய்வு செய்துள்ளார். 

இதன்போது, காவலர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து ஐஸ்வர்யா சென்ற நிலையில், உயர் அதிகாரியை அடையாளம் காண இயலாத காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவல் அதிகாரி, அவரை தடுத்து என்னவென்று விசாரித்துள்ளார். 

இதையடுத்து, தான் காவல் துணை கண்காணிப்பாளர் ஐஸ்வர்யா என்று தெரிவித்ததும், அவருக்கு காவல்துறை வணக்கம் செய்து காவல் நிலையத்திற்குள் அனுமதி அளித்துள்ளார். இருந்தாலும், கோபமடைந்த ஐஸ்வர்யா, என்னை அடையாளம் தெரியாமல் எப்படி தடுக்கலாம்? என்று விளக்கம் கேட்டுள்ளார். 

இந்த விஷயத்திற்கு காவல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக விளக்கமும் அளித்துள்ளார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத துணை கமிஷனர் ஐஸ்வர்யா, கொச்சியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள உயர் நீதிமன்றப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணிக்கு உத்தரவிட்டுள்ளார். 

கேரளாவில் டிராபிக் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு, ஆறு மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண் அதிகாரியை 12 மணி நேரம் பணியாற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக கேரள காவல் துறையில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், கேரள காவல் நிலையங்களில் யாராக இருந்தாலும் உரிய விசாரணைக்கு பின்னரே காவல்நிலையத்தில் அனுமதி செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால், உயர் அதிகாரியின் வாகனத்தை கூட அந்த பெண் அதிகாரியால் அடையாளம் காண இயலவில்லையா? என்ற கேள்வி எழுப்பியிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் இருக்கும் இடத்தில் இருந்து வாகன நிறுத்தும் இடத்தை பார்க்க இயலாத வகையில் கட்டிட அமைப்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக கேரள உள்துறை அமைச்சகம், காவல்துறையிடத்தில் விளக்கம் கேட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Ernakulam IPS Aishwarya Police Lady Cop Punishment Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->