வெளியான உளவுத்துறை எச்சரிக்கை! முதல் மாநிலமாக அலர்ட் ஆன கேரளா!  - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல்க்கு பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்பாடானது, இந்திய ராணுவத்தினரால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அப்போதும் இந்தியாவில் அவர்கள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. 

இதற்கிடையே பதான்கோட், புல்வாமா தாக்குதலுக்கு மூல காரணமான மசூத் அசார் ரகசியமாக பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில், குஜராத் கடல் பகுதியான சர் க்ரீக்கில் ஆட்கள் இல்லாத படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது என கூறியுள்ள அவர் தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் குறித்து இராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, கேரளா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் விழிப்புணர்வை உண்டாக்க மாநிலம் முழுவதும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கேரளா மாநில டிஜிபி லோகநாத் பெஹெரா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala DGP alert all over state after warning from military


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->