நிறைவேற்றப்பட்ட சட்டம்! கேரளா முதல்வர் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


நடந்துமுடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு, வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி அசாத், எதிர்க்கட்சிகள் சார்பில் இந்திய ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 28ம் தேதி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பிலும், தமிழகத்தில் திமுக சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்துள்ள பேட்டியில்,  “கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதுக்கான வாய்ப்பு, சட்டரீதியான போராட்டம் குறித்து ஆய்வு செய்ய சட்ட அமைச்சகத்தை கேட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளோம்” என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm press meet about agri bill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->