மலப்புரத்தில் மும்மடங்கு ஊரடங்கு.. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் தள்ளிவைப்பு - பினராயி விஜயன்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை உச்சமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் கொரோனா பரவலின் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

கேரள மாநிலத்தை பொறுத்த வரையில் இன்று 28514 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 45400 பேர் பூரண நலன் பெற்றுள்ளனர். 176 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு மும்மடங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் காவல் துறையினரும் அம்மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7 முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் 21 ஜூன் முதல் 7 ஜூலை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan Complete tribal Lockdown at Malappuram District SSLC Exam Post Pend 22 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->